×

அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: தகவல் ஒலிபரப்பு ஊடக பிரிவுகளுக்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல்

சென்னை: ஒன்றிய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகன், முதன்முறையாக நேற்று சென்னை வந்தார். அவரை, ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர். அவர்களிடையே பேசிய அமைச்சர் எல்.முருகன், ‘ஒன்றிய தகவல் ஒலிபரப்பு துறை ஊடக அதிகாரிகள், சமூக ஊடகங்களில் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களையும், மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தஒன்றிய அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும். விவசாயிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறையினால் பயனடைந்தோரின் அனுபவங்கள் குறித்த தகவல்களையும், ஒன்றிய அரசின் மின்னணு ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும். இதேபோல், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புத்தக வெளியீட்டு பிரிவு தமிழ்நாட்டின் வரலாறு, பாராம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்கள் அதிக அளவில் வெளியிட வேண்டும்,’ என்றார். 
  தொடர்ந்து, செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு ஊடகப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, இயக்குநர் குருபாபு பலராமன், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் காமராஜ், அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

The post அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்: தகவல் ஒலிபரப்பு ஊடக பிரிவுகளுக்கு ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Minister of State ,L. Murugan ,Chennai ,Union Information and Broadcasting Ministry ,South Region ,Information and Broadcasting ,
× RELATED காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரண...